இந்த வருடத்தில் மாத்திரம் 3,918 டெங்கு நோயாளர்கள் பதிவு

16.01.2022 05:10:38

இந்த வருடத்தின் இரண்டு வாரங்களில் 3,918 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் ஷிலந்த செனவிரத்ன குறிப்பிட்டார்.