உதயமானது 'சர்வசன அதிகாரம்'
27.05.2024 14:34:18
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF), பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய (PHU) மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ‘ 'சர்வசன அதிகாரம்' என்ற புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளன.
இயக்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கொழும்பில் இன்று (26) காலை கையெழுத்திட்டனர்.
மவ்பிம ஜனதா கட்சி (எம்ஜேபி), ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை எம்.பி மன்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற அரசியல் குழுக்களில் அடங்கும்.