சரத்பொன்சேகாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்!

24.03.2022 13:56:16

ராஜபக்ஸக்கள் எவராயினும் தமிழர்களால் விரட்டப்படுவார் என்று சரத்  பாென்சேகா கூறிய கருத்துக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் பதிலடி கொடுத்துள்ளார். 

இவ்விடயத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்று (23) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கைறில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவாலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவாலும் ஒருபோதும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது.  தமிழ் மககளின் வாழ்விடங்களுக்கு அவர்கள் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவர் என  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா  தெரிவித்திருந்தார்.இக்கருத்துக்கு  நீங்கள் கூறுவது சரியானது தான் பொன்சேகா அவர்களே, ஆனால் உங்களுக்கும் நாங்கள் அதே பதிலடிதான் தருவோம் என பதிலடி கொடுத்துள்ளார்.