எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு.
22.02.2026 14:20:00
3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை இன்றிரவு விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே சன்ன ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
மக்கள் அசௌகரியம்
அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை முதல் தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையே, எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.