கிடைக்ககூடிய மாற்று மருந்துகளை அடிப்படையாகவைத்தே இனிமேல் சிகிச்சை!

12.03.2022 16:18:14

அரசமருத்துவமனைகளில் 50 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்துள்ள சுகாதாரதொழில்துறையினர் சம்மேளனம்,கிடைக்ககூடிய மாற்று மருந்துகளை அடிப்படையாகவைத்தே மருத்துவநிபுணர்கள் சிகிச்சைகளை திட்டமிடவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மருந்துப்பொருட்களின் விலை அதிகரிப்பு முழு சுகாதார துறைக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி என தெரிவித்துள்ள சுகாதார தொழிற்துறையினர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவிகுமுதேஸ் தனியார் மருந்தகங்களில் இருந்து அதிக விலைக்கு மருந்துகளை வாங்குவது வழமையாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

விலை அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் மருந்துப்பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கப்போகின்றன-மருத்துவமனைகள் நோயாளர்களின் பொருளாதாரநிலையை பொறுத்தே மாறுபடும் சுகாதார அமைப்பை பேணவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.