கோழி – முட்டை இறைச்சி விலைகளில் மாற்றம்!

03.01.2022 05:47:07

கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.

750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.