சமையல் எரிவாயு வெடிப்பு - பொலிஸ் குழு நியமனம்
சமையல் எரிவாயு கசிவு, தீப்பற்றல் அல்லது வெடித்தல் ஆகிய சம்பவங்களினால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கான பொலிஸ் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் டி.எம்.டப்ள்யூ.தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதற்கமைய, மேற்குறிப்பிட்டது போன்ற விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதற்கமைய, சம்பந்தபட்ட அதிகாரிகளினால் வட்ஸ் அப்பினூடாக எரிவாயு அனர்த்தங்களின் படங்கள் மற்றும் பிற விவரங்களை அனுப்பி விரைவில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அதுதொடர்பான முறைப்பாடுகள் மூன்று நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.