குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தினால் மட்டுமே நீதியை பெற முடியும்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தினால் மட்டுமே நீதியை நிலை நாட்ட முடியும்
என பிரிட்டனில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈழத் தமிழ் பெண் வேட்பாளரான உமா குமரன் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.
பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் என தெரிவித்துள்ள உமா குமரன், மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இல் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்காகவும் இதுவரை எவரும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது
உண்மையாகவே நம்பமுடியாத விடயம் என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைமூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்ட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.