அதிபர் வெற்றிடம்...! கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு...

16.07.2022 11:35:24

புதிய அதிபராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவுகளை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கான வாக்கெடுப்பு ஏதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மும்முனைத்தலைவர்கள்

இப்போட்டியில் மும்முனைத்தலைவர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித்பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும ஆகிய மூவரும் போட்டியிடத் தயாராகியுள்ளனர்.

இந்நிலையில் யாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்று வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும்19 ம் திகதி இடம்பெற்ற பின்னரே யார் யார் போட்டியிடுகின்றனர் என்று உறுதிப்படுத்திய பின்பு அன்றைய தினமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவு எடுப்போம்.

அதுவரைக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் நாடாளுமன்றத்திலுள்ள பிரதான கட்சிகளுடனும் பேச்சுக்கள் தொடரும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.