யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்

30.11.2021 16:27:45

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் இன்று காட்சி கொடுத்த நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இன்று ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வெளிமண்டபத்தில் அம்பாள் நாகரூபத்தில் அடியவர்களுக்கு காட்சி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.