அரசாங்கத்தால் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகின்றோம்!
இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் ஒடுக்கப்படுகின்றோம் என வடக்கு மாகாணத்தை சேர்ந்த மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (22) யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் அரசியல் கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார், இலங்கையின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார். அத்தோடு வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து இருக்கிறார்.
ஆனால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களுடைய பிரச்சனைகளும் எங்களுடைய வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்ற மீனவர்களுடைய பிரச்சனைகளை பேசவில்லை இலங்கையுடைய ஜனாதிபதியும் இது பற்றி கலந்துரையாடவில்லை இவ்வாறான விடயங்களை பார்க்கும் போது வடக்கு கடற்தொழலாளர்களை பொறுத்த அளவில் எங்களுக்கு வேதனை அளிக்கின்றது என தெரிவித்தார்.