2.5 பில்லியன் டொலர் கடனுதவி!

12.04.2022 09:42:42

இலங்கை தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் டொலர் சீனக் கடனைப் பெறும் சீனா இலங்கைக்கு இரண்டரை பில்லியன் டொலர் கடனை வழங்கும் என பீஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதற்கான உறுதிப்படுத்தல்களை சீன அதிகாரிகள் வழங்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.


இந்த ஏற்பாடுகளில் $1 பில்லியன் கடன் மற்றும் $1.5 பில்லியன் கடன் வசதி ஆகியவை அடங்கும்.

இந்தப் பணம் எதிர்வரும் ஜூலை மாதம் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என பீஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.