2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை !

30.07.2021 11:58:51

 

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இதன்படி 16 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 33 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ஜப்பான், 15 தங்கம், 4 வெள்ளி 7 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 41 பதக்கங்களை பெற்று அமெரிக்கா மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

9 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 30 பதக்கங்களுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.

9 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம் என அடங்கலாக மொத்தமாக 22 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா நான்காவது இடத்திலும் உள்ளது.

பிரித்தானியா, தென்கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.