வெளிநாட்டுக்கு செல்ல தயாராகும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர்
18.12.2021 08:35:45
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவதாகவும், பின்னர் அவர் வெளிநாடு செல்வதற்கு தயாராகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்குரிய நிலைமையில் தலைவர் தொடர்ந்து ஊடக சந்திப்புகளை புறக்கணித்து வருகின்றார். இதன் காரணமாக ஆளும் கட்சி தரப்பினரால் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில் முகம் கொடுக்க முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.