சீனாவில் இருந்து இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.

22.07.2022 11:00:00

சீனாவில் இருந்து 500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் இது தொடர்பான தகவல்களை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை அடைந்துள்ளது.

இந்நிலையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.

 

 

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ், 7,900 பாடசாலைகளில், 1.1 மில்லியன் சிறுவர்களுக்காக 3 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது என்று சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.