IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு
14.11.2024 08:58:05
இன்று பொதுத் தேர்தல் தினத்தன்று இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, தமது பயணத்தை ஒத்திவைத்துள்ளது.
இலங்கையில் பொதுத் தேர்தல் இடம்பெறுவதால் நாளை மறுதினம் 16ஆம் திகதியே தமது குழுவின் பயணம் இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதேவேளை முன்னதாக இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று 14ஆம் திகதி இலங்கைக்கு வருவதாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது