ஒருதொகுதி மருத்துவப்பொருட்கள் வருகிறது

30.04.2022 10:29:01

இந்தியாவிடமிருந்து ஒருதொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் இந்த மருந்துத் தொகுதி கையளிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் 95 அத்தியாவசிய மருந்துகள் தொகை நன்கொடையாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.