எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய வாக்குறுதி

17.10.2022 10:19:45

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் அல்லது விவாதங்களை விட பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்துக்கு உரியது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.