நந்தாவில் வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு உலருணவு 

19.11.2021 07:56:47

கோண்டாவில் மேற்கு நந்தாவில் j /116 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் வறுமைகோட்டுக்குள் வாழும் மிகுந்த நலிவுற்ற, அதிக விதவை குடும்பங்களை கொண்ட பகுதியில் இம்முறை பருவ மழை வெள்ளம் இன்னும் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது .

அந்தவகையில் இந்த பகுதி மக்களின் வறுமை மற்றும் பாதிப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு, பூமணி அம்மா அறக்கட்டளையினரால் இன்று (19/11/2021) ஒருதொகுதி  உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன .
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாளாந்த  வேலை செய்து வாழும் இந்த கிராமத்தின் மக்கள் அதிக கஸ்டத்தின் மத்தியில் வெள்ளப்பெருக்கில் மூழ்கி துன்பப்படுகின்றமை தொடர்ச்சியாக வருடா வருடம் இடம் பெறும் துன்பியல் சம்பவம் என்பதையும் இங்கே குறிப்பிட முடியும் .