ஜீவன் - பவித்ராவுக்கு ரணில் முன்னிலையில் அமைச்சு பதவிகள்!
19.01.2023 08:25:39
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் இன்று (19) அதிபர் செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இராஜங்க அமைச்சர்
இந்தநிலையில், ஜீவன் தொண்டமான் இதற்கு முன்னர் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் இராஜங்க அமைச்சராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.