அரைக்கம்பத்தில் பறக்கவுள்ள சிறிலங்கா தேசிய கொடி

04.01.2023 21:49:08

நாளையதினம் (05) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இது அமைந்தது.

 

முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் மறைவிற்கு இரங்கல்

இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டின் இறுதிக்கிரியைகள் நாளை (05) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.