22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு.
25.09.2026 08:53:50
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து இன்று (25) சபைக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்விரு சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாளான இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டமூலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் நேற்று பத்தரமுல்லை பொல்துவ சந்திப்பில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
“ஜனநாயகத்தை அழிக்கும் 22ஆவது திருத்தத்திற்கு வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.