பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் இணைகிறது 'சட்டம்'!
|
இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் 'சட்டம்' என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. |
|
பாடசாலை மாணவர்களிடையே சட்ட அறிவு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கில், ஆரம்பக் கல்வியில் இதனை ஒரு கட்டாயப் பாடமாகவும், உயர்தரத்தில் ஒரு விருப்பப் பாடமாகவும் அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 2025 ஆம் ஆண்டு முன்மொழிந்திருந்தது. பாடத்திட்ட மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களின் சட்ட பீடங்களின் பிரதிநிதிகள் ஆலோசனைகளுக்காக அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளது. தற்போதைய 2026 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பாடத்திட்டங்களில் இந்த மாற்றம் உள்வாங்கப்படவில்லை. இருப்பினும், உயர்தர புதிய பாடத்திட்ட தொகுதிகள் தயாரிக்கப்படும் போது இந்த யோசனை பரிசீலிக்கப்படும் என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கலேன தெரிவித்துள்ளார். |