
எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்.
03.07.2025 09:41:27
இலங்கையர்கள் அனைவருக்கும் ஸ்டார் லிங் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். |
மேலும், விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் டிஜிட்டல் துறைக்கான மேலதிக வாய்ப்புகளை ஆராய இந்த சந்திப்பு நம்பிக்கை அளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |