பதவிப்பிரமாணம் செய்த சிறிலங்கா அமைச்சர்கள் !

20.05.2022 09:59:51

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்களின் அடிப்படையில், 

நிமல் சிறிபாலடி சில்வா - துறைமுகம், கப்பல்துறை, விமானசேவை அமைச்சு.

சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சு.

கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சு.

விஜயதாச - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.

ஹரின் பெர்ணான்டோ - சுற்றுலாத்துறை, காணி அமைச்சு.

ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை அமைச்சு.

மனுச நாணயக்கார - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு.

நளின் பெர்ணான்டோ - வர்த்தகம், கைத்தொழில், உணவு பாதுகாப்பு அமைச்சு.

டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

இதேவேளை தினேஷ் குணவர்தன, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர ஆகிய நால்வரும் ஏற்கனவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.