தமிழ் மக்களினை பிரிப்பதற்கு பிள்ளையானும் துணைபோகின்றார்
10.12.2021 16:32:23
தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Ra.Shanakiyan) குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) துணைபோகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.