பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிப்பு!

10.12.2021 06:35:29

2020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு நடவடிக்கைகள் இன்றைய தினம் நிறைவுறுத்தப்படவிருந்தன.

எனினும், மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.