ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் 15 ஆம் திகதி சந்திப்பு

10.03.2022 08:15:53

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய  கூட்டமைப்புக்கும் இடையில் வரும்   15 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை கூட்டாக சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பலதடவை முயன்ற வேளையில் தற்போது அந்த சந்தர்ப்பம் கைகூடியுள்ளது.