கருவறைக்குள் சென்ற மகிந்த வெடித்தது புதிய சர்ச்சை
21.03.2022 08:36:25
சமீபத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் மேலாடையுடன் வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
மேலும் அவர் அம்பாளின் கருவறைக்கே சென்று ஆசி பெற்றார்.இதுவே வேறு யாரேனும் அந்தணர் இல்லாத ஒருவரை அனுமதிப்பீர்களா? என்ற கேள்வியும் எழுந்தது.
சாதாரண அந்தணர் அல்லாத ஒருவர் எமது சமய மரபுகையும் மீறி கருவறைக்குள் சென்று வழிபாடு நடாத்துவது சரியா என்ற கேள்விகள் தற்போதுஎழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .