சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் முன்னாள் அரச தலைவர் வெளியிட்ட தகவல்

27.12.2021 07:51:32

சர்வதேச நாணய நிதியம் தனக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில், மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது எவ்வாறு என்ற பிரச்சினை எழுந்துள்ளது. பொருளாதாரம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேசம் என்பனவற்றை நாம் குழப்பிக்கொண்டுள்ளோம்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு பலர் கோருகின்றனர்.

எனினும் அரசாங்கத்தின் பிரதானிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படப் போவதில்லை என கூறுகின்றார்கள். நான் எனது ஆட்சிக் காலம் முழுவதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றினேன்.

எனினும் சில நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்களிடம் திட்டவட்டமாக கூறியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.