2022 வரவு -செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 6ஆம் நாள் இன்று!

29.11.2021 06:24:40

2022 வரவு -செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் ஆறாம் நாள் இன்று நடைபெறுகிறது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் மற்றும் சூரிய, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சின் செலவின தலைப்புகள் இன்று விவாதிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடி , விவாதம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.