அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை

20.02.2022 14:26:56

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (21) வெளியிடப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அரச வாகனங்களின் எரிபொருளை பயன்படுத்த வேண்டாமெனவும் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.