பிரதமர் தினேஷ் குணவர்தனவும் தலதா மாளிகைக்கு விஜயம்..!

31.07.2022 10:04:48

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார்.

இன்று (31) காலை தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமராக பதவியேற்ற பிறகு கண்டி புனித தலதா மாளிகைக்கு பிரதமர் செல்வது இதுவே முதல் தடவையாகும். 

தலதாமாளிகைக்கு ரணிலின் விஜயம்

இந்நிலையில், சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அவரை தொடர்ந்து இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி, தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க