பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை
05.11.2021 07:03:30
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அயல் குடும்பத்தாருக்கும் தனது குடும்பத்திற்கும் நேற்று (04) இரவு ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.