யாழ்ப்பாணம் வேலணையில் பயங்கரம் -மூவர் வைத்தியசாலையில்
14.03.2022 04:24:24
தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு, தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.