எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும்

04.07.2022 10:09:18

பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் கட்டளை தளபதி, யாழ் மாவட்ட ஆயரிடம் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர, யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளாரை இன்றைய தினம் அவரது இல்லத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ் ஆயர் கருத்து தெரிவிக்கையில், 

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.   அதனால்  இயன்ற அளவு அரச அதிபரோடு இணைந்து அவரின் ஒத்துளைப்புடன் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளதாக யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

அத்தோடு எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போய் வருவது கஷ்டமாகவுள்ளது.   முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பினையும் கொடுத்து தயாராக இருப்பதாகவும் கட்டளை தளபதி தெரிவித்திருதார்.

அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய பணியினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராணுவம் ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தெரிவித்தார்.