முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை உயர்வு
22.03.2022 07:39:49
இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழி இறைச்சி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள், குறிப்பிட்டுள்ளனர்.