டயகம – ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
07.12.2021 05:56:53
டயகம – ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து நேற்று (6) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், டயகம ஐந்தாம் பிரிவைச் சேர்ந்தவர் 53 வயதான ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்ம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டயகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.