சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது
17.11.2021 06:43:22
உயிர்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை நேற்று (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
காத்தான்குடி 4ம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டு கொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் குறித்த நபரை சம்பவதினமான நேற்று இரவு அவரை அவரது வீட்டில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.