இன்று முதல் யாழ்தேவி!
21.10.2024 08:43:51
வடக்குப் பாதையில் இன்று முதல் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,யாழ்தேவி ரயில் இயக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
வடக்கு பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மாத்திரமே ரயில் இயக்கப்படுகிறது. இந்திய கடன் உதவியுடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் தற்போது வடக்கு ரயில்வே பாதை அமையப்பெற்றுள்ளது. |