எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ள ரணில்!
11.09.2022 10:32:14
2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளார்.
இதற்காக சிறிலங்காவின் அதிபர் செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க தனது இந்த குறுகிய கால விஜயத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராணியாரின் இறுதிச்சடங்குகள்
மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் ரணில் லண்டன் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.