தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
17.11.2024 07:47:41
தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது