சீனாவின் யாழ் வியூகத்தால் பதறும் டெல்லி !
17.12.2021 16:27:24
சிறிலங்காவின் வடபகுதிக்கான சீனாவின் இராஜதந்திர பயணத்தை இந்தியா சாதாரண விடயமாக நோக்கவில்லை என்பதை அந்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இன்று வெளியிட்டிருக்கும் செய்திகள் புலப்படுத்துகின்றன.
தமிழர் தாயகத்தில் சீனர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சற்று வியப்புடனும், பதற்றத்துடனும் சில ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன.