மின் விளக்குகள் ஒளிர சப்பறத்தில் வலம் வந்தான் சந்நிதியான்
09.09.2022 10:59:06
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில்,08.09.2022 சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
09 09.2022 காலை 9 மணிக்கு தேர் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் செப்டம்பர் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.
சப்பறத் திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் தேர்த்திருவிழாவிலும் இன்னும் திரளாக மக்கள் கலந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.