NSB வங்கி ஊழியர்களுக்கு VRS

14.05.2024 15:01:35

2019 ஆம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியின் ஊழியர்களுக்காக தன்னார்வ ஓய்வு திட்டம் (VRS) அறிமுகப்படுத்தப்படும். 

செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கும், மாற்றத்தை சீராக நிர்வகிப்பதற்கும், தேசிய சேமிப்பு வங்கியானது இலங்கை சேமிப்பு வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் இரண்டையும் உள்வாங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட தன்னார்வ ஓய்வுத் திட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. 

தானாக முன்வந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பல்வேறு சந்தை காரணிகளின் அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.