சுனாமி நிவாரணக் கட்டமைப்பு
26.12.2022 19:00:00
மக்களுக்கு சரியான அபிவிருத்தி இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
இன்று(26) சுனாமி நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுனாமி நிவாரணக் கட்டமைப்பு
விடுதலைப் புலிகளின் சுனாமி நிவாரணக் கட்டமைப்பை மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றம் மூலம் இரத்துச் செய்ததாகவும், அதற்கு பிரதானமான காரணமாக கிளிநொச்சியில் தலைமையகம் இருந்ததே காரணம் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
சுனாமியால் இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு சரியான அபிவிருத்தி இல்லை என்றும் அதற்கு காரணம், மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்குரிய நிதியினை கெல்பிங் அம்பாந்தோட்டை மூலம் மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.