பண்டிகைக்காக மேலும் 3 கோடி முட்டை இறக்குமதிக்கு அனுமதி
23.02.2024 08:24:50
பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் (3 கோடி) முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி – ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 60 மில்லியன் (6 கோடி) முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அதற்கமைய நாட்டுக்கு 90 மில்லியன் (9 கோடி) முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.