கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி

02.01.2022 06:10:25

பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது.

குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிகாவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.