தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்

19.04.2022 06:01:21

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.