மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்
22.11.2021 08:07:11
மூத்த ஊடகவியலாளரும் , உதயன்,காலைக்கதிர் பத்திரிகைகளின் ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்று(22) திங்கட்கிழமை தனது 79ஆவது வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுக்குள் இவரும் ஒருவர்.
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் , விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேவேளை ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியமைக்காக கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.